







குழந்தைகளுக்கான தமிழ் கற்றல் காணொளிகள்
பாடல்கள், நீதிக் கதைகள், அறிவியல் மற்றும் தமிழ்நாட்டு வரலாறு உள்ளிட்ட தலைப்புகளில் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் காணொளிகள். தெளிவான குரல் மற்றும் தமிழ் வசனங்களுடன் இளம் கற்றவர்களுக்காக உருவாக்கப்பட்டவை.
சாகசம்
முயலும் ஆமையும் கதையின் மூலம் விடாமுயற்சியின் உயர்வையும் தமிழ்க்கற்றலையும் சிறுவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்ளும் பயனுள்ள பதிவு!
மாம்பழத்தைக் காணாமல் தேடும் மூன்று காட்டு நண்பர்கள், அணிலின் உண்மையைப் புரிந்து மகிழ்ந்து, பழத்தைப் பகிர்ந்து சாப்பிடும் சுவாரஸ்யக் கதை!
கேலிக்குள்ளாகும் ஒரு சிறுவனுக்கு வயதான தாத்தா தரும் மாயக் காப்பு, ஒரு விரல் சொடுக்கில் அவன் நினைத்த நல்ல காரியங்களை உடனே நிறைவேற்றுகிறது.
குப்புசாமி வெள்ளம் கடலுக்குள் அடித்துச் சென்றது. திமிங்கலம் விழுங்க, வயிற்றிலேயே மிதித்து வெளியில் பறந்து வலையில் விழுந்தான்
நீதிக் கதைகள்
பொம்மைக்காகப் பணம் திருடிய வருண், பாட்டிக்கு மருந்து வாங்க முடியாமல் போனதால் தவறை உணர்ந்து திருந்தினான். நேர்மையே சிறந்த செல்வம்!
எடையில் ஏமாற்றிய கடைக்காரரை மந்திரப்படி திருத்தியது. தவறை உணர்ந்த அவர் நேர்மையானார். நேர்மையே அனைவரின் நம்பிக்கையையும் தரும்!
குருவி இலை போட்டு எறும்பைக் காப்பாற்றியது; எறும்பு வேடனைக் கடித்துக் குருவியைக் காப்பாற்றியது. நாம் செய்யும் நல்லுதவி நமக்கே திரும்ப வரும்!
வெற்றி நட்ட விதை பல நாட்கள் முளைக்கவில்லை. ஆனாலும் பொறுமையோடு தினமும் நீர் ஊற்றினான். அது பெரிய மரமாகி பலன் தந்தது. பொறுமையே வெற்றி தரும்!
அறிவியல்
உப்பு நீரில் முட்டை மிதப்பது ஏன்? தண்ணீரின் அடர்த்தி அறிவியலை எளிய கதை வழியே சிறுவர்கள் தமிழில் கற்போம்!
இளநீர் கீழே விழுந்தது ஏன்? புவியீர்ப்பு விசையின் அறிவியலை எளிய கதை வழியே தமிழில் கற்போம்!
மழை எப்படி வருகிறது? அம்மா கூறிய சுவாரஸ்யமான கதை மூலம் மலருடன் சேர்ந்து நாமும் கற்றுக்கொள்ளலாம்!
வரலாறு மற்றும் தொல்லியல்
தாமிரபரணியின் சிறப்புகளைச் சிறுவர்களுக்கு எளிய தமிழில் எடுத்துரைத்து, வரலாற்றையும் இயற்கை வளத்தையும் பயிற்றுவிக்கும் கற்றல் பதிவு!





